கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிவிப்பு


 


கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றவும் ஈஷா தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.



கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் லட்சக்கணக்கான தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு உதவும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தன்னார்வலர்களை கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளையும் இந்த சவாலான சூழலில் மக்களுக்கு சேவையாற்ற உறுதி ஏற்றுள்ளது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ஈஷா தன்னார்வலர்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அதில் அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகும் தினக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வேலையின்மையின் காரணமாக, பசி, பட்டினியால் வாடும் 2 பேருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர்இறந்தார் என்ற நிலைவராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.



இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதை செய்வதுமட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து, பொதுமக்களுக்கு மருத்துவசிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :