ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் விழா


மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு (ஆயுஷ்மான் பாரத்) திட்டம் பாரத பிரதமரின் கனவுத் திட்டமாகும். வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் உயர் சிகிச்சை அடித்தட்டு மக்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் பெரும் வகையில் இந்த காப்பீடு திட்டம் பாரதப் பிரதமரால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஈரோடு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெரியசேமூர் மண்டலப் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் வழங்கி துவக்கிவைத்தார்.




மாநில பிரச்சார பிரிவு தலைவர் சரவணன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்  தியாகு, பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் சீனிவாசன், மாவட்ட பொது செயலாளர் விவேகானந்தன், குருகுணசேகர், ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் தீபக் ராஜ், பெரியசேமூர் கிழக்கு மண்டல தலைவர் மெய்யானந்தன் 21வது வார்டு பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி சூரம்பட்டி மண்டல் தலைவர்  சின்னதுரை காசிபாளையம் மண்டல தலைவர்கள் வீரப்பன்சத்திரம் மண்டலத்தில் அவர்கள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. நாள் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
1200க்கும் அதிகமான பொதுமக்கள் காப்பீடு பெற்று பயனடைந்தனர்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :