சிறுநீரக நோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு அவசியம் மதுரை கிட்னி மைய டாக்டர் தினகரன் தகவல்


 


 


சிறுநீரக நோய் வராமல் தடுக்க  விழிப்புணர்வு அவசியம் என்று  மதுரை கிட்னி மைய டாக்டர் தினகரன் தெரிவித்தார்.


விரைவில் அனுசரிக்கப்படவிருக்கும் உலக சிறுநீரக தினத்தின் கருப்பொருளாக, “அனைத்து இடங்களிலும், அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்-முன்தடுப்பிலிருந்து நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பராமரிப்பிற்கு சமத்துவமான அணுகுவசதி” என்பது தேர;வு செய்யப்பட்டிருக்கிறது.  


“உலகளவில், நீடித்த சிறுநீரக நோய்   உயிரிழப்புக்கு அதிவேகமாக வளர;ச்சியடைந்து வரும் காரணங்களுள் ஆறாவதாக இருக்கிறது.  உலகளவில் நாட்பட்ட, நீடித்த சிறுநீரக பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.7 மில்லியன் நபர;கள் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்தியாவில் 7.8 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் நாட்பட்ட சிறுநீரக நோய்களோடு அவதிப்பட்டு வாழ்ந்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.  நாட்பட்ட, நீடித்த சிறுநீரக நோய் என்பது, சிறுநீரகங்கள் எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்படுவதிலிருந்து தங்களை நிறுத்திக்கொள்வதை குறிக்கிறது.  நமது சிறுநீரகங்கள படிப்படியாக செயல்பாட்டு திறனை இழப்பது அதிகரித்து வருமானால், அதை, நாட்பட்ட, நீடித்த பிரச்சனையாக வகைப்படுத்தலாம்.  சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாடு என்பது, இரத்தத்தை வடிகட்டி, கழிவையும் உடலிலிருந்து மிகைப்பட்ட உப்பையும் அகற்றுவதாகும். ஆனால், நீடித்த சிறுநீரக நோயுள்ள நபர்களில், அவர;களது சிறுநீரகங்களால் இரத்தத்தை வடிகட்டி வழங்குவது இயலாமல் போய்விடுகிறது.  இதுவே தீவிரமான பாதிப்பு மற்றும் சீர;குலைவை விளைவிப்பதால் டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துதல் ஆகிவற்றிற்கு வழிவகுக்கிறது,” என்று மதுரை கிட்னி சென்டரின் இயக்குனரும், தலைமை சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர; வு. தினகரன் கூறினார்.
 
நோய் கட்டுப்பாடு மற்றும் முன்தடுப்பு மையத்தின் மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வுகளின்படி சிகேடி பாதிப்பிற்கான மிக பொதுவான காரணமாக நீரிழிவு சார்ந்த சிறுநீரக வாதம் என கண்டறியப்பட்டுள்ளது.  நீரிழிவு பாதிப்புள்ள மூன்று வயது வந்த நபர;களுள் ஏறக்குறைய ஒருவரும் மற்றும் உயர; இரத்தஅழுத்தம் உள்ள 5 வயது வந்த நபர்களுள் ஒருவரும் சிறுநீரக நோயை பெறக்கூடும் என்று அந்த ஆய்வுகள் கூறுகின்றன.  நீரிழிவு மற்றும் உயர;இரத்த அழுத்தம் என்பவைகளுக்கும் கூடுதலாக, சிறுநீரக நோய்க்கான அதிக இடர்வாய்ப்பில் உங்களை வைக்கக்கூடிய அம்சங்களுள் கீழ்க்கண்டவையும் அடங்கும்: இதயநோய், உடற்பருமன் (அளவுக்கு அதிகமான உடல்எடை) மற்றும் சிறுநீரக நோய் இருந்த குடும்ப வரலாறு.  வழக்கமாக, சிறுநீரக நோயை வராமல் தடுக்கமுடியும் மற்றும் அடிப்படை நோயறிதலுக்கான உரிய அணுகுவசதி மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இறுதிநிலை சிறுநீரக நோய் ஏற்படுவதை தாமதிக்கச் செய்ய முடியும்.  இந்நோய்க்கான சில அறிகுறிகளை சுட்டிக்காட்டி விளக்கிய டாக்டர் தினகரன், சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் உடனடியாக வெளிப்படையாக தோன்றுவதில்லை; ஆகவே உங்களது சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்று அறிவதற்கான ஒரே வழிமுறை அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்வதுதான்.  மக்களிடமும் மற்றும் சுகாதார சேவை வழங்குனரிடமும் மற்றும் கொள்கை உருவாக்குபவரிடமும் இந்நோய் வராமல் பின்தொடர;வதற்கான நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து சிறப்பான விழிப்புணர்விற்கான அவசியம் இருக்கிறது என்பதையே இது குறிக்கிறது,” என்று கூறினார்.
 
நாட்பட்ட, நீடித்த சிறுநீரக நோய்களுக்கான அறிகுறிகளுள் பாதம், கணுக்கால்கள் அல்லது கால்களில் வீக்கம், தொடர;ந்து இருக்கும் உயர;இரத்த அழுத்தம், களைப்பு மற்றும் எலும்பு சேதம் ஆகியவையும் உள்ளடங்கும்.  ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது, நீரிழிவு, உயர; இரத்தஅழுத்தம் வராமல் தடுக்க உதவும் மற்றும் இதன் வழியாக சிறுநீரக நோய்களின் பாதிப்பை தடுக்க இயலும்.  உணவில் உப்பு உட்கொள்ளும் அளவை குறைப்பது, குறைவான கொழுப்புள்ள உணவுகளை உண்பது, தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது மற்றும் மருத்துவரிடம் சென்று குறித்த காலஅளவுகளில் விரிவான பரிசோதனைகள் செய்துகொள்வது ஆகியவை இதற்கு பெரிதும் உதவும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர;.  “உங்களது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு மேற்கூறப்பட்ட அனைத்தும் முக்கியமானதாக இருக்கின்றபோதிலும், இரத்த சர;க்கரை அளவை முடிந்தவரை அதற்குரிய வரம்பிற்குள் வைத்திருப்பது மிக இன்றியமையாதது.  இறுதியாக, மருத்துவர;களால் ஒரு நோயாளிக்கு குறித்துரைக்கப்படும் மருத்துவ செயல்திட்டத்தை தவறாமல் பின்பற்றுவது முற்றிலும் இன்றியமையாததாகம். பல நபர;கள், இடையிலேயே சிகிச்சை திட்டத்தைப் பின்பற்றாமல் நிறுத்திவிடுகின்றனர;.  இது, மருந்துகளையே முற்றிலுமாக எடுத்துக்கொள்ளாததற்கு நிகரானதாகும்” என்று டாக்டர் தினகரன் சுட்டிக்காட்டினார்.
 
உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுவதன் இலக்கு என்னவென்றால், இதுகுறித்து போதுமான விழிப்புணர்வை பரப்புவதாகும்.  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒவ்வொருவரும் பின்பற்றுவதும்  மற்றும் அனைவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உயர;தரமான அனைத்து திறன் வசதிகளையும் கொண்ட சுகாதார சேவைகளுக்கு அணுகுவசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதும் இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் குறிக்கோளாகும். 


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :