சிவகாசி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சியில் விழிப்புணர்வு முகாம்


மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக, விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,  சிவகாசி துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், சிவகாசி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் சாமிநாதன் ஊராட்சி ஒத்துழைப்புடன் சிவகாசி ஒன்றியம் மண்ணுக்கு மீண்டான் கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம், கொரோனா வைரஸ் தடுப்பு, போஷன் அபியான் மற்றும் மகளிர் மற்றும் குழந்தை நலம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
இரண்டு நாட்களாக நடைபெற்ற இம்முகாமில், முதல்நாள் குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேஷன் உயர்நிலைபள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி, கிராம மகளிர்க்கு இசை நாற்காலி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. 
இரண்டாம்நாள் நடைபெற்ற பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் அபி அர்ச்சனா கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது.  பின்பு நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் வர்க்கீஸ் தலைமை வகித்து இதுபோன்ற நிகழ்வுகள் மக்களை கழிவறையை பயன்படுத்த மேலும் ஊக்கப்படுத்தவும், கழிவறை இல்லாதவர்கள் கழிவறை கட்டிக்கொள்ளவும் பயனுள்ளதாக அமைகிறது என்று குறிப்பிட்டார்.  சிவகாசி துணை இயக்குனர் அலுவலக மாவட்ட பயிற்சி மருத்துவர் பிரபு பாண்டியன் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்தும், கைகழுவும் முறை குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் குறிச்சும் பேசினார். சிவகாசி ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் போஷன் அபியின் திட்டம் குள்ளத்தன்மையை குறைக்கவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை களையவும் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.  சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்று எடுத்துரைத்தார். ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை நிகழ்த்தினார் கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன்.  ஒன்றிய தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் அய்யணசாமி நன்றி தெரிவித்தார்.


Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image