சமூகப் பொறுப்புத் திட்டத்தில் தேர்ப்பேட்டை ஏரியைப் புனரமைத்தது கேட்டர்பில்லர்


சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ஓசூர் அருகிலுள்ள கிராம மக்களுக்காக தெர்பேட் ஏரியை கேட்டர் பில்லர் நிறுவனம் புனரமைத்துக் கொடுத்துள்ளது
கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனத்தின் தொழிற்துறை மின்சாதனங்கள் தயாரிப்பு (IPSD) ஆலையின் அருகில் உள்ள கிராமப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த டிச.17, 2018ல் இந்தத் திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் தொடங்கியது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்பு இந்த ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.
எட்டு ஏக்கர் நிலம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குடிமராமத்து செய்யப்பட்டு பாதைகள் மற்றும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு முதல் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று ஐபிஎஸ்டி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் ரமேஷ் முத்துராமன் தெரிவித்தார். நகர்ப்புறங்களில் உள்ள பல்வேறு ஏரிகள் கடுமையாக மாசுபட்டுள்ளன என்றும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், வறட்சியை எதிர்கொள்வதிலும் ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைப்பது முக்கியமான நடவடிக்கை என நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் வாழும் மற்றும் பணி புரியும் இடங்களின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூழலியல் சமநிலையை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பு என்பதால், தேர்ப்பேட்டை ஏரியை புனரமைப்பதற்கு முதலீடு செய்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
தரமான கல்வி, தூய்மையான குடிநீர், தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுகாதார கட்டமைப்புகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது, ஆலைகள் அமைந்துள்ள சுற்று வட்டார மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக செலவிடுவது உள்ளிட்ட சமூகப் பணிகளை மேற்கொள்வதில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.
இந்தத் திட்டத்தை துவங்கும் முன்னர் இந்த ஏரியின் சுத்திகரிக்கப்படாத நீர் பாசி படிந்து மிகவும் அழுக்காகக் காணப்பட்டது. இந்த நிலையில் ஏரி மற்றும் அதனைப் பயன்படுத்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் மற்றும் ஏரிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பான, அழகான மற்றும் குப்பைக் கூளங்களற்ற பகுதியாக மாற்றும் திட்டத்தை கேட்டர் பில்லர் நிறுவனம் முன்னெடுத்தது.
குடி மராமத்துப் பணிகளுடன் ஏரி நீரும் சுத்திகரிக்கப்பட்டதை அடுத்து இந்த ஏரியின் நீர்த்தேக்கத் திறன் 61 மில்லியன் லிட்டராக அதிகரித்தது. அத்துடன் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்ததால் தற்போது இந்த ஏரி 1500 குடும்பங்களுக்கு பயன்பட்டு வருகிறது. கரைப் பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் விதமாக கற்கள் பதிக்கப்பட்டு ஏரியைச் சுற்றி வலை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் விளக்குகளும் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1930ம் ஆண்டிலிருந்தே கேட்டர் பில்லர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 11,000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்