ஹெல்த் கண்டீஷனர்கள் வழியாக ஏசி- க்களில் இஎப்எல் ஒருபுரட்சியை மேற்கொண்டுள்ளது


சந்தையில் தலைமைத்துவ நிலையில் வீற்றிருக்கும் மற்றும் ஆக்குவாகார்டு தண்ணீர் சுத்திகரிப்பான்கள் உற்பத்தியாளராகத் திகழும் யுரேக்கா ஃபோர்ப்ஸ் லிமிடெட், நாட்டின் முதல் ‘ஹெல்த் கண்டீஷனர்’ - ஃபோர்ப்ஸ் - ன், இந்தியா முழுவதற்குமான அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. இது போன்ற வகைகளில் முதலாவதாக இருக்கும், ஃபோர்ப்ஸ் ஹெல்த் கண்டீஷனர், வழக்கமான ஏர்-கண்டீஷனர்களைக் காட்டிலும் ஒரு படிநிலை முன்னாள் உள்ளது. ஏர்-கண்டீஷனர்களின் 6மூ சந்தை ஊடுறுவல் மற்றும் நுகர்வோரின் தேவைகள் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் ஃபோர்ப்ஸின் பணி, குளிரூட்டலுடன் முடியவில்லை. ஆற்றல்மிக்க, காப்புரிமை பெறப்பட்ட ‘ஆக்டிவ் ஷீல்டு’ தொழில்நுட்பம் கொண்டுள்ள இத்தயாரிப்பு, வெறும் இரண்டு மணி நேரங்களில்,99மூ மைக்ரோப்கள் மற்றும் கிருமிகள் இல்லாத காற்றை வழங்குகிறது. மேலும் இது, காற்றை திறன் வாய்ந்த முறை வாசனை அகற்றலும் செய்கிறது.


25 - க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் 7.3 மில்லியன் யூனிட்டுகள் கொள்ளளவுடன், ஏர்-கண்டீஷனர் சந்தை அதிக நெருக்கடி மிக்கதாகத் திகழ்கிறது. ரூ.20,000 கோடிகளுக்கு மேல் மதிப்பு வாய்ந்த இத்துறை, கடந்த ஆண்டு,25மூ என்னும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்தது. அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவோ, குஜராத்தின் ஒட்டுமொத்த சந்தையில் 2.8மூ மற்றும் கேரளாவின் ஒட்டுமொத்த சந்தையில் 2.5மூ சந்தை பங்களிப்பினைக் கைபற்றியுள்ள ஃபோர்ப்ஸ் பிராண்ட், 45,000 யு+னிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. கடைகள் மற்றும் அலுவலகங்களை குளிர்ச்சியாகவும் மற்றும் ஆரோக்கியமான காற்றைக் கொண்டதாகவும் மாற்றும் வகையில், இது கேஸெட் மற்றும் டவர் ஏசிக்களையும் அறிமுகம் செய்துள்ளது.


யுரேக்கா ஃபோர்ப்ஸ் லிமிடெட், தலைவர், விக்ரம் சுரேந்திரன் கூறுகையில்: “ஹெல்த் கண்டீஷனர்கள் என்பவை, தற்போது ஆண்டு முழுவதும் தேவைப்படும் ஒன்றாக மாறியுள்ளது. தற்காலத்து நுகர்வோர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை ஏதுவாக்கும் புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த வளர்ந்து வரும் ஆர்வத்திற்கான பதிலாக ஃபோர்ப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து இத்தகைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தத்தக்க தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.ஃபோர்பஸ் - ன், தனித்துவமிக்க ‘ஆக்டிவ் ஷீல்டு தொழில்நுட்பம், 99சதவீதம் கிருமிகளை அகற்றுகிறது மற்றும் வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் குளிர்ச்சியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இந்த அனைத்து பருவநிலைக்குமான ஹெல்த் கண்டீஷனரின் கம்பிரஸரை ஆஃப் செய்துவிட்டு, குளிர்காலங்களிலும் சுத்தமாக காற்றபை; பெறும் வகையில் இதைப் பயன்படுத்தலாம்.இந்த வகையினத்தில் 5 ஸ்டார் (1 டிஆர், 1.5 டிஆர் செயல்திறன்) மற்றும் 3 ஸ்டார்  (1 டிஆர் 1.5 டிஆர் 2 டிஆர்) ஆகியவைகள் ரூ.43,990 முதல் ரூ.64,990 வரையிலான விலைகளில் கிடைக்கப்பெறுகிறது என்றார்.


Popular posts
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image