ரசிகர்களுடன் ஏனைய பிரபலங்களைப்போல் டிக்டாக்-இல் இணைகிறார் ராணா டகுபதி


கைபேசி குறுங்காணொலிகளுக்குப் புகழ் பெற்ற டிக்டாக்-இல் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், தொழில் முனைவோருமான ராணா டகுபதி சமீபத்தில் இணைந்துள்ளார்.  இத்தளத்தில் வெளியான அவரது முதல் காணொலிக்கு 13.5 மில்லியன் பார்வைகளுடன் ரசிகர்களிடமிருந்து மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.  ராணா தனது இரண்டாவது காணொலியில் டிக்டாக்-இன் பிரபல ஃபில்டர்களுள் ஒன்றான ‘அவுட்சைட் Vs இன்சைட்’ மூலம் தாந்து நிஜ மற்றும் திரைப்பட வாழ்க்கையைக் காட்சிப்படுத்தினார். 


படைப்பை வெளிப்படுத்தவும், தங்களுடைய ரசிகர்களுடன் இணைந்திருக்கவும் தென் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் டிக்டாக்-இல் தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கின்றனர். தங்களது மறக்க முடியாத சிறப்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்ள அல்லு சிரிஷ், லக்ஷ்மி மஞ்சு, சிம்ரன் ரிஷி பக்கா, கேதரீன் தெரசா அலெக்சாண்டர் ஆகியோர் டிக்டாக்-இன் வலுவான 200 மில்லியன் பயனீட்டாளர் சமூகத்துடன் இணைந்துள்ளனர்.  மேலும் இசைக் கலைஞர்களும், இசை அமைப்பாளர்களுமான அனிருத் ரவிச்சந்தர், நவீன் சஜ்ஜு மற்றும் டி இமான் ஆகியோரும் தங்களது இசைப் பயணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடன் இணைந்திருக்கவும், குறுங்காணொலிகளைப் பதிவேற்ற டிக்டாக்-ஐப் பயன்படுத்துகின்றனர்.  


தங்களது ரசிகர்களுடன் சேர்ந்து குதூகலத்துடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்குவதுடன், ட்ரெண்டிங்கான சவால்களிலும் பங்கேற்கும் கோவிந்தா,தீபிகா பதுகோனே, வருண் தவான், கஜோல், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, அனுபம் கேர், மாதுரி தீக்ஷித் நேனே, ரிதீஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாகுலின் ஃபெர்னாண்டெஸ் உள்ளிட்ட பிரபலங்களுடன் டிக்டாக்-இல் இணைகிறார் ராணா டகுபதி.


Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image