ஸ்டைலிஷான ஏ31 மூலம் ஏ வரிசையை ஓபோ விரிவுபடுத்துகிறது


முன்னணி வகிக்கும் பன்னாட்டு ஸ்மார்ட் ஃபோன் பிராண்டான ஓபோ இந்தியாவில் புத்தம் புதிய ஓபோ ஏ31 அறிமுகம் மூலம் தனது பொருள் பட்டியலை விரிவுபடுத்தி உள்ளது.  4ஜிபி + 64ஜிபி விலை ரூ 11,490/- மற்றும் 6ஜிபி +  128ஜிபி விலை ரூ 13,990/- ஆகும்.  ஓபோ ஏ31 ஸ்மார்ட்ஃபோன் எடை குறைந்த வடிவமைப்பு மற்றும் ஆற்றல்மிகு அம்சங்கள் எதிர்பார்ப்பை விடவும் கூடுதலான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.


இதிலுள்ள 12 எம்பி டிரிப்பிள் ரியர் கேமரா (மேக்ரோ மற்றும் போர்ட்ரைட் மோட்), 8எம்பி ஃப்ரண்ட் கேமரா துல்லியமான செல்ஃபிக்கள் எடுக்க உதவும்.  ஓபோ ஏ31 குறைந்த எடை வடிவமைப்பில் பொருத்தப்பட்டுள்ள ஆற்றல்மிகு 4230 எம்ஏஹெச் மின்கலன் நீடித்த ஆயுளைத் தரும். கலர்ஓஎஸ் 6.1.2 வில் இயங்கும் ஓபோ ஏ31 வாடிக்கையாளர்களுக்கு சிக்கலற்ற அனுபவத்தை அன்றாடம் அளிக்கும்.   கார்னிங்க் கொரில்லா க்ளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ள ஓபோ ஏ31 அதிகபட்ச லைட்வெயிட் பவர் ஹவுஸ் ஸ்மார்ட்ஃபோன் எனில் மிகையல்ல. நேவிகேஷன் கெஸ்சர், ஸ்மார்ட் அசிஸ்டண்ட், மியூசிக் பார்டி, சைக்ளிங்க் மோட் உள்ளிட்ட ஸ்மார்ட் அம்சங்களுக்கு ஓபோ ஏ31 ஆதரவளிக்கும்.   ஆற்றல்மிகு ஐஏ திறன் கொண்ட 12 எம்பி லென்ஸ் தெளிவான மற்றும் ஒளிரும் உருவங்களுக்கும், 2 எம்பி செக்கண்டரி லென்ஸ் வன்பொருள் அடிப்படையிலான போர்ட்ரைட் பூகே விளைவை தெள்ளத் தெளிவாகக் படமெடுக்கும். ஓபோ ஏ31 ஸ்மார்ட்ஃபோனின் 6.5 இன்ச் திரையில் புத்தம் புதிதாக வடிவமைக்கப்பட்ட நேனோ-வாட்டர் ட்ராப் நாட்ச் பொருத்தப்பட்டுள்ளது.  
 


அறிமுகம் குறித்து ஓபோ இந்தியா, பொருள் & சந்தையியல் துணைத் தலைவர், சுமீத் வாலியா கூறுகையில் ‘எங்கள் கண்டுபிடிப்பின் மையமாக வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டே ஓபோவில் தொழில்நுட்பத்தை எப்போதும் உருவாக்குகிறோம். வாடிக்கையாளகளைக் கவனத்தில் கொண்ட பிராண்டாக விளங்கும் ஓபோவின் நோக்கம் அனைத்து விலைப் பிரிவுகளிலும் அதி நவீன தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும்.  மிகச் சிறந்த ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை அனைவருக்கும் ஏற்ற விலையில் வழங்க வேண்டும் என்னும் எங்கள் முனைவுகளுக்கு ஓபோ ஏ31 மேலும் ஊக்கமளிக்கும்.  ஏ வரிசையின் வெற்றி உயர் தொழில்நுட்பப் பொருள்களை கண்கவர் வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்னும் எங்கள் தொடர் முனைவுக்குச் சான்றாக விளங்குகிறது.  எங்களது முந்தைய ஏ வரிசை பொருள்களுக்கு வாடிக்கையாளர்கள் அளித்த மகத்தன வரவேற்பு ஓபோ ஏ31 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகத்துக்கும் தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.


Popular posts
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image