ஏப்ரல் 1, 2020 கடைசிக்குள் நாடு முழுவதும் பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் சப்ளையை கொண்டு சேர்க்க இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியாக உள்ளது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் தகவல்
கோவையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான எல்பிஜி எரிவாயு குறித்த கருத்தரங்கு நிறைவுபெற்றது.
இந்த கருத்தரங்கு கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் அமைந்துள்ள ஆதித்யா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. துவக்க விழாவில் ரத்னகிரி ரிபைனரிஸ் அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி. அசோக், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி இயக்குனர் டாக்டர். எஸ். எஸ். வி. ராமகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கிவைத்தனர். துவக்கவிழாவை தொடர்ந்து தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடைபெற்றன.
நிறைவு விழாவிற்கு வந்திருந்தவர்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி செயலாக்க இயக்குனர் திரு. சுனில் மாத்தூர் வரவேற்று பேசியதாவது :
சமையல் எரிவாயு தாண்டி பிற தொழில்துறைகளில் எல்பிஜியை விரிவாக்குவது குறித்து எட்டு கட்டங்களாக விரிவாகப் இந்த மாநாட்டில் பேசப்பட்டது. சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வணிக வளர்ச்சி ஒப்பிடப்பட்டும் பேசப்பட்டது. உலகில் எல்பிஜி உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்திலும், நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரண்டு நாட்களில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் உபயோகமான, வளர்ச்சியை நோக்கிய விவாதங்களால் பயன் பெற முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கொச்சி, ரீபைனரி செயல் இயக்குனர், முரளி மாதவன் பேசியதாவது : தொழில் வளர்ச்சிக்கு, எல்பிஜியின் பயன்பாடு பல வழிகளில் விரிவாக்கம் பெற்றுள்ளது. புவி வெப்பமயமாதலை பற்றி இந்த இரண்டு நாட்கள் கருத்தரங்கில் விரிவாகப் பேசப்பட்டது. இந்த நோக்கில், சுற்றுச்சூழல் காக்க, எல்பிஜியின் முக்கிய பங்கை உணரமுடிந்தது. ஆட்டோமொபைல் துறையில் எல்பிஜியின் பங்கு ஏற்றம் கொண்டு வருகிறது என்றார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இக்குனர் குர்மீத் சிங் பேசியதாவது : டிஸ்ட்ரிபியூட்டர் விரிவாக்கத்தில் நவீன தொழில் நுட்பத்தை புகுத்துவதில் மிகவும் முனைப்பாக உள்ளோம் என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் பேசியதாவது : இந்த இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பான நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதை ஏற்பாடு செய்த அனைவரையும் வாழ்த்துகிறேன். எல்பிஜியின் எதிர்காலம் இந்தியாவில் சிறப்பாக உள்ளது. நவீன தொழில்நுட்பம், விநியோகஸ்தர்களின் நல்ல ஒத்துழைப்பு ஐஓசியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வசதிகளை பூர்த்தி செய்து தக்க வைத்துக் கொள்வதில் முழு ஈடுபாட்டோடு இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு தருவதில் இந்தியன் ஆயில் நிறுவனம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கும்.
இந்தியன் ஆயில் இதர எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுடன் (பிபிசி மற்றும் ஹெச்சிபி) இணைந்து ஏப்ரல் 1, 2020 அன்று முதல் நாடு முழுவதும் பரவலாக பாரத் ஸ்டேஜ்-6 ஆட்டோமோட்டிவ் எரிபொருட்களை (பெட்ரோல் அண்டு டீசல்) வெளியிட உள்ளது.
இந்தியாவின் எரிபொருள் மேம்பாட்டுத்திட்டத்தின் ஓர் அங்கமாக 1990-களின் ஆரம்பத்திலேயே வாகனங்களுக்கான மாசுகட்டுப்பாட்டு விதிகள் இந்தியா முழுவதும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போதைய பாரத் ஸ்டேஜ்-4 விதிகள் 2017-ல் இருந்து அமலாக்கம் செய்யப்பட்டன. அதற்கு முன்னர் பாரத் ஸ்டேஜ்-2 மற்றும் பாரத் ஸ்டேஜ்-3 ஆகிய விதிகள் முறையே 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் அமலாக்கம் செய்யப்பட்டன. பாரத் ஸ்டேஜ்-6 வெளியேற்றம் மற்றும் எரிபொருள் தரநிர்ணயங்களுக்கு மாறும் விதத்தில் மிகவிரைவில் மாசு அளவை மிகவும் கடுமையாக குறைக்கும் பொருட்டு பாரத் ஸ்டேஜ்-5 விதிகளை பின்பற்றுவது கைவிடப்பட்டது.
பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் சப்ளையானது டெல்லி என்சிஆர்-க்கு ஏப்ரல் 2019-திலும் நாட்டின் இதர பகுதிகளுக்கு ஏப்ரல் 2020-திலும் வழங்கப்பட இருந்தது. ஏப்ரல் 1, 2018 முதல் டெல்லி ஃ என்சிடி ஆகியவற்றிற்கு ஓஎம்சிக்கள் பாரத் ஸ்டேஜ்-6 கிரேடு எரிபொருட்கள் சப்ளை செய்வதற்கு மாறிவிட்டன. ஏப்ரல் 1, 2019 அன்று பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் சப்ளையானது ராஜஸ்தானின் அருகே அமைந்த 4 மாவட்டங்களுக்கும் தேசிய தலைநகர மண்டலத்தில் (என்சிஆர்) உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதில் ஆக்ரா நகரமும் உள்ளடங்கும். அக்டோபர் 1, 2019 முதல் பாரத் ஸ்டேஜ்-6 கிரேடு எரிபொருட்கள் அரியானா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பாரத் ஸ்டேஜ்-4 எரிபொருளைவிடவும் பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருளில் உள்ள முக்கிய மேம்பாட்டு அம்சங்கள் : உலகளாவிய எரிபொருள்தர அளவீடுகளுக்கு இணையான தகுதி பெற்ற மிகவும் பரிசுத்தமான எரிபொருள் தான் பாரத் ஸ்டேஜ்-6. பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருளில் இருந்த 50 பிபிஎம் அளவிலான கந்தகமானது பாரத் ஸ்டேஜ்-6-ல் 10 பிபிஎம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருளில் கந்தகத்தின் அளவு குறைக்கப்படுவதன் மூலம் சிஓ, ஹெச்சி, என்ஓஎக்ஸ் மற்றும் நுண்துகள் போன்றவை வெளிப்படுவதைக் குறைப்பதற்கு உதவும் சுத்திகரிப்பிற்கு பிந்தைய சாதனங்களைப் பயன்படுத்த முடியும். அதனால், பாரத் ஸ்டேஜ்-4 விதிகளைப் பின்பற்றும் வாகனங்களை ஒப்பிடும்போது பாரத் ஸ்டேஜ்-6 வாகனங்கள் வெளியிடும் என்ஓஎகஸ்) வெளியீடுகள், நுண்துகள் வெளியீடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன் வெளியீடுகள் மிகமிக குறைவாகவே உள்ளன. கந்தகம் குறைந்த எரிபொருளுடன் பழைய தலைமுறை டீசல் வாகனங்களை இயக்கும் போதும்கூட நுண்துகள்கள் வெளியீடு கணிசமாக குறைந்துவிடும்.
டீசலில் உள்ள பாலி அரோமடிக் ஹைட்ரோகார்பன்கள் பாரத் ஸ்டேஜ்-4-ல் இருந்த 11 சதமை ஒப்பிடும் போது பாரத் ஸ்டேஜ்-6-ல் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் கார்சினோஜெனிக் வெளியீடும் குறைந்துவிடுகிறது. தரமான சோதனை நிலைகளின் கீழ் பாரத் ஸ்டேஜ்-6 டீசலின் வெளியீட்டு விதிகள் கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸில் உள்ளதைவிட நன்றாக அல்லது உயர்ந்ததாக உள்ளன.
இந்தியன் ஆயிலில் பாரத் ஸ்டேஜ்-6-ஐ நடைமுறைப்படுத்துதல் : சுத்தமான எரிபொருள் திட்டத்திற்காக ரூ.17,000 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட செலவில் பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் தயாரிப்பிற்கு இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையங்கள் மாறிவிட்டன. நிறைவு செய்யப்பட்ட திட்டங்களில் டீசல் ஹைட்ரோ ட்ரீட்டர், கேஸோலைன் ஐசோமெரைசேஷன், ஹைட்ரோ டீசல்ஃபரைசேஷன் மற்றும் தற்போதைய செயலாக்கங்களை புதுப்பித்தல், அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஆஃப்சைட் மற்றும் பயன்பாட்டு வசதிகள் ஆகியவை உள்ளடங்கும். சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தும் போது இந்தியன் ஆயில் உள்முகமாக மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களையே பயன்படுத்தியது.
பாரத் ஸ்டேஜ்-6 திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முழுமைபெற்றுவிட்டது மேலும் அனைத்து இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையங்களும் பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் தயாரிப்பை துவங்கிவிட்டன. 100 சதம் பாரத் ஸ்டேஜ்-6 விதிகளுக்கு இணங்கிய எரிபொருளை தயாரிக்கும் முதல் நிலையமாக திக்பாய் சுத்திகரிப்பு நிலையம் விளங்குகிறது.
நாடு முழுவதிலும் பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் விநியோகங்களுக்குமாற இந்தியன் ஆயிலின் மார்க்கெட்டிங் மற்றும் ரீடெயில் கட்டமைப்பு முழுமூச்சில் இயங்கி வருகிறது. அனைத்து மொத்த சேமிப்பு டெர்மினல்களும் ஃ டெப்போக்களும் பாரத் ஸ்டேஜ்-4 லிருந்து பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருட்களுக்கு ஏற்கனவே மாறிவிட்டன. இந்த விதத்தில் முழுமையாகமாற இந்தியா முழுவதிலும் உள்ள பெட்ரோல் பம்ப்புகளில் நாஸில் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 1,2020 என்ற கடைசி தேதிக்குள் நாடு முழுவதும் பாரத் ஸ்டேஜ்-6 எரிபொருள் சப்ளையை வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் விநியோக கட்டமைப்புடன் தயாராக இருப்பதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை சமையல் காஸ் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. விறகு, கரி, டீசல் உள்ளிட்டவற்றைக் காட்டிலும் எரிவாயுவின் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 50 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதனால், உள்ளாட்டு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகிறோம். மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து, விவசாயிகள் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது மொத்த எரிவாயு பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது. இதை 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதிதாக எரிவாயு பகுதிகளை கண்டுபிடிக்கும் திட்டத்துக்கு மட்டும் இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது. பைப்லைன் மூலம் எரிவாயு கொண்டுசெல்லும் திட்டங்களிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. என்று பேசினார்.
விழாவில் சிறந்த கண்காட்சியாளருக்கு விருது வழங்கப்பட்டது. விழா முடிவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில அலுவலக செயலாக்க இயக்குனர் ஜெயதேவன் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.