மதுரையில் கே.டி.எம் இன் அற்புதமான ஸ்டண்ட் நிகழ்ச்சி நடைபெற்றது


 


ஐரோப்பிய பந்தய ஜாம்பவானான கேடிஎம் ஸ்டண்ட் ஷோ நிகழ்ச்சியை மதுரையில் நடத்தியது. மதுரையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் தொழில் நிபுணத்துவ சாகச ஓட்டுனர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களை பைக்குகளில் செய்து காட்டினர். இந்த ஸ்டண்ட் ஷோ நிகழ்ச்சி மதுரை, கே.எல்.என் ஐ.டி கல்லூரியில் நடைபெற்றது. மெய்சிலிர்க்க வைக்கும் இந்த ஸ்டண்ட் ஷோ நிகழ்ச்சியில் தொழில் நிபுணத்துவமிக்க சாகச ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.


இதுபற்றி பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின், புரோபைக்கிங் பிரிவின் முதுநிலை துணைத் தலைவர் சுமித் நராங் கூறுகையில், கேடிஎம் பிராண்ட் அதன் உயர் செயல்திறன் கொண்ட பந்தய பைக்குகளுக்காக பெயர் பெற்றதாகும் மற்றும் எங்களது வாடிக்கையாளர்கள் கேடிஎம் பைக்குகளின் சாகசங்கனை அனுபவிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இத்தகைய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன மற்றும் இது எதிர்காலத்தில் இன்னும் விரிவாக நடத்தப்படவுள்ளது. கேடிஎம் ஒரு பிரத்தியேக ப்ரீமியம் பிராண்டாகும் மற்றும் நாங்கள் கேடிஎம்-ன் தனித்துவமிக்க அனுபவத்தினை எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் உறுதியாகவுள்ளோம் என்று தெரிவித்தார்.கேடிஎம் ரசிகர்கள் புதிய கேடிஎம் பைக்குகளை கேடிஎம் கேகே நகர் - 252, சுந்தரம் பார்க் எதிரில், 80 அடி சாலை, எல்ஐஜி காலனி மதுரையில்  உள்ள கேடிஎம் ஷோரூமில் வாங்கலாம், என்று கேடிஎம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image