மாருதி சுசூகி புத்தம் புதிய விட்டாரா ப்ரெஸாவை அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் புத்தம் புதிய விட்டாரா ப்ரெஸா-வில் விலைகளை அறிவித்தது. இந்த புதிய சிறிய ரக SUV விட்டாரா ப்ரெஸா-வில் மேம்படுத்தப்பட்ட ஸ்போர்டினஸ், திடமான தோற்றம், வலுவான அமைப்பு, உயர்தர உட்புற வடிவமைப்பு மற்றும் இன்னும் பல புதிய அம்சங்கள் உள்ளன.  இந்த சிறிய ரக SUV காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஹைபிரிட் அட்வான்ஸ்டு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதிகளைக் கொண்டது.புத்தம் புதிய விட்டாரா ப்ரெஸாவினை அறிமுகம் செய்து வைத்த மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்-ன் மேலான் இயக்குனர் , தலைமை நிர்வாக அலுவலர்  கெனிச்சி ஆயுகாவா கூறியதாவது,கடந்த நான்கு வருடங்களில் விட்டாரா ப்ரெஸா மிகவும் ஆற்றல் வாய்ந்த பிரான்டாக வளர்ந்து வந்துள்ளது. ப்ரெஸா அதன் வலிமை, நகர்ப்புறத்திற்கு ஏற்ற தன்மை மற்றும் உயர்தர தோற்றம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது., இந்த புத்தம் புதிய விட்டாரா ப்ரெஸா, தனது வாடிக்கையாளர்களின் அளவற்ற ஆதரவினைப்பெற்ற அதன் முந்தைய ரகத்தின் மேன்மையான பெருமையை தொடர்ந்து எடுத்து செல்லவுள்ளது."என்றார்இந்த புத்தம் புதிய விட்டாரா ப்ரெஸா மூன்று புதிய டியுவல் டோன் வண்ணங்களில் கிடைக்கிறது. அவை, மிட்நைட் பிளாக் ரூஃப்-உடன் கூடிய சிஸ்லிங் ரெட் (சிஸ்லிங் சிவப்பு), மிட்நைட் பிளாக் ரூஃப்-உடன் கூடிய டார்க் ப்ளூ மற்றும் ஆட்டம் ஆரஞ்சு  ரூஃப்-உடன் கூடிய கிரானைட் கிரே ஆகியனவாகும்.அறிமுகப்படுத்திய நான்கு ஆண்டுகளில் ஐந்து லட்சத்திற்கும் மேலான எண்ணிகையில் விற்பனையைக் கடந்ததன் மூலம் அதன் வாகனப் பிரிவில் விட்டாரா ப்ரெஸா-வின் ஆதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.


Popular posts
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image