டிக்டாக்-இல் தங்கள் தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் கோலிவுட் பிரபலங்கள்

படைப்புத் திறனுக்கும், அதிரடிக் காட்சிகளுக்கும் புகழ் பெற்ற தமிழத் திரைப்படத் துறையின் கோலிவுட் நட்சத்திரங்கள் உலகின் முன்னணி குறுங்காணொலி தளமான டிக்டாக்-இல் இணைந்துள்ளனர்.  அனிருத் ரவிச்சந்தர், சிம்ரன் ரிஷி பக்கா மற்றும் டி இமான் ஆகியோர் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பிலிருக்கக் குதூகலம் மற்றும் புதுமையான காணொலிகளை பதிவேற்றி உள்ளனர். இவர்களைப்போல் இன்னும் பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் இணைந்திருக்கக் குறுங்காணொலிகளைப் பயன்படுத்தி டிக்டாக்-இல் சேர்ந்துள்ளனர். முதல் காணொலியில் ‘கொலவெறிடி’ இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்த தளத்தில் இணைந்தது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளர்களுள் ஒருவரான டி இமான் ‘என் இனிய தனிமையே’ என்னும் தனது பாடலின் காணொலியைப் பதிவேற்றிக் ‘காதலர் தினம்’ அன்று ‘ஒற்றை’ பயனாளியாக இருக்கும் அனைவருக்கும் அதைச் சமர்ப்பித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தென் இந்தியத் திரைப்படத் துறையின் தாரகையாக திகழும் சிம்ரன் ரிஷி பக்காவின் சமீபத்திய ‘மை ஔர் மேரி க்வாஷீன்’ புத்தம் புதிய பாடலின் காணொலி 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.  


அனிருத் ரவிச்சந்தர், சிம்ர ரிஷி பக்கா மற்றும் டி இமான் ஆகியோர் ஏற்கனவே டிக்டாக்-இல் இணைந்துள்ள பிரபலங்களான கோவிந்தா, தீபிகா பதுகோன், வருண் தவான், கஜோல், ஷில்பா ஷெட்டி குந்ரா, அல்லு சிரிஷ், லக்ஷ்மி மஞ்சு, கேதரீன் தெரஸா அலெக்ஸாண்டர், அனுபம் கேர், மாதுரி தீஷித் நேனே, ரிதீஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸ் சேர்கின்றனர்.  இப்பிரபலங்கள் அனைவரும் தங்களது ரசிகரளுடன் தொடர்பிலிருக்கத் தளத்தில் டிரெண்டிங்காக உள்ள சவால்கள் மற்றும் பிரச்சாங்கரங்களில் பங்கேற்பர். Popular posts
கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image