ஆல்ப்ஸ் மலைகளின் அழகிய அனுபவம்

நியூசிலாந்து நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலைகளின் அழகிய சூழலில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மற்றும் கேன்டர்பரி பிராந்தியம்சுற்றுலா பயணிகளுக்கு பல அற்புத அனுபவங்களை வழங்கக்கூடிய ஒரு தனித்துவமான இடமாகும்.காணக் கண்கொள்ளா இடமான இந்தப் பகுதிகேளிக்கை நிறைந்த சாகச விளையாட்டுகள், ஆங்காங்கேஅழகிய நகரங்கள் மற்றும் மறைவான கடற்கரைகள் என அழகிற்கு ஒரு நுழைவாயிலாக திகழ்கிறது.


2011 நிலநடுக்கத்தினால் சேதமடைந்து வெற்று சுவர்கள்நிறைந்திருந்த கிறிஸ்ட்சர்ச் நகரம், தெரு ஓவியங்களுக்கான உலகின்தலைநகரமாக மாறியிருக்கிறது – அதற்குக்காரணம் அதிகரித்து வரும் இந்த வண்ணமயமான கிறிஸ்ட்சர்ச் நகர்புற ஓவியங்கள்தான். இந்த நகரம் ரசிக்கத்தூண்டும் தெரு ஓவியங்களுக்காக தனக்கென ஒரு சிறப்புஅந்தஸ்தினை பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சிலிருந்து வடக்கே இரண்டரை மணிநேரம் கண்களுக்கு விருந்து படைக்கும் அழகிய சூழலில் பயணித்தால், சுற்றுலா பயணிகள் நார்த் கேன்டர்பரியின் கிராமப்புற அழகினை ரசிக்கலாம். பின்பு, திமிங்கிலங்களைக் காண உலகில் சிறந்த இடங்களுள் ஒன்றான கைகோராவை அடையலாம்.


சாம் குரோஃப்ஸ்கி என்பவருக்கு சொந்தமான பிரபல சி-1 எஸ்பிரஸ்ஸோ கஃபே நிறுவனம் - ஒரு பரபரப்பான ஹை ஸ்டீர்ட் உணவகமாகும். கிறிஸ்ட்சர்ச் நகரின் மையப்பகுதியில் சேதம் ஏற்பட்ட பிறகு அதிலிருந்து முதலில் மீண்ட நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2021, கிரிக்கெட் போட்டியை நடத்த கிறிஸ்ட்சர்ச் தயாராகி வருகிறது. சூடாக ஒருகோப்பை காபி குடித்தபடியே இந்நகரினைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒரு ஊரின் மக்கள் இல்லையென்றால், அந்த ஊரே ஒன்றுமில்லாததாகும். கஃபெயின் லேபாரட்டரி-யின் உரிமையாளரான ஜேம்ஸ் பாக்ரி இவ்வாறு கூறுகிறார்.


Popular posts
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image