கேஐஏ மோட்டார்ஸ் இந்தியாவின் கார்னிவல் ப்ரீமியம் எம்.பி.வி  


கேஐஏ மோட்டார்ஸ் கார்பொரேஷன் குழுமத்தின் ஓர் அங்கமான கேஐஏ மோட்டார்ஸ் இந்தியா இன்று இந்தியச் சந்தைக்காக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இரு புதிய பொருள்களை அறிமுகப்படுத்தியது.  இந்தியச் சந்தைக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சொகுசான கேஐஏ கார்னிவல் ப்ரீமியம் எம்.பி.வி காட்சியில் கேஐஏ புதிய சொனேட் கான்சப்ட் அறிமுகப்படுத்தியது.  முதல் முறையாக அறிமுகமாகி உள்ள கேஐஏ சொனேட் ,  பிராண்டின் எதிர்கால பன்னாட்டு காம்பேக்ட் எஸ்யுவி முன்னோட்டமாகும். 2020 இரண்டாம் காலாண்டில் இந்தியச் சந்தைக்காக அறிமுகத்துக்கு முன்பாகவே இந்தக் கருதுகோள் மேலும் மேம்படுத்தப்படும்.


பிரிமியம் வேரியண்ட் (எக்ஸ்-ஷோரூம்) ரூ24.95 , பிரெஸ்டிஜ் வேரியண்ட் (ஏக்ஸ்-ஷோரூம்)  ரூ28.95, லிமோசின் வேரியண்ட் (எக்ஸ்-ஷோரூம்) ரூ33.95 என மூன்று வேறுபட்ட விவரக் குறிப்புகளுடன்  இந்தியாவில் கார்னிவல் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி உள்ளது.  நவீன, அசத்தல் மற்றும் உறுதியான வடிவமைப்பு கொண்ட சோனெட் முதல் தரமான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும்.  ஹெட்–டர்னிங்க் லுக்ஸ், கேஐஏ-வின் சிக்னேச்சர் ‘டைகர்-நோஸ்’ கிரில், கிரில் மெஷ்க்கு உள்ளேயே ஸ்டெப் வெல் ஜியோமெட்ட்ரி, ‘டைகர்-ஐலைன்’ டேடைம் ரன்னிங்க் லைட்ஸ், வைட் ரியர் சிக்னேச்சர் லைட்டிங்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.  .


இது குறித்து கேஐஏ மோட்டார்ஸ் இந்தியா மேலாண் இயக்குனர்,  சிஇஓ கூகியுன் ஷிம் கூறுகையில் ‘இரு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய வாடிக்கையாளர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளவே இந்தியாவில் தடம் பதித்தோம்.  எளிமையாகச் சொல்வதென்றால் – விலை உயர்ந்த கார்களை இங்கே தயாரித்து விற்பது – என்னும் எங்கள் அணுகுமுறை இன்றைக்கு எதிர்பார்த்த பலனைத் தருகிறது என்று சொல்வேன்.  எங்களது சமீபத்திய அறிமுகமான  கேஐஏ கார்னிவல்  இந்த அணுகுமுறைக்கான தெளிவான உதாரணமாகும். செல்டோஸ்- இல் இருந்து பிரிமியம் மற்றும் லட்சியப் பிரிவுக்கான பாய்ச்சல் என்றாலும் அதே ஆர்வத்துடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தியச் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருவதைத் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மிகச் சிறந்த மற்றும் புதுமையான பொருள்களையும், சேவைகளையும் வழங்குவோம்’ என்றார்.  


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்