ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு

 புனேவைச் சேர்ந்த ஃப்ளேம் பல்கலைக்கழகத்தின் ‘உயர் தாக்க தொழில்முனைவு மற்றும் புதுமை’ குறித்த நாள் முழுவதும் நடைபெற்ற மாநாடு 2020 பிப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  இதில் ஐ.டி., எஃப் அண்ட் பி, ஹெல்த்கேர், மற்றும் எஜுகேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதுமைப்பித்தர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், முதலீடுகள், யூனிகார்ன்களை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவு போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து விவாதித்தனர்.


மாநாட்டில் ஃப்ளேம் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மற்றும் புதுமைக்கான மையம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘முதுகலைப் பட்டப் படிப்பான தொழில்முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியது,  பார்வையாளர்களிடம் உரையாற்றிய ஐ.சி.இ.ஆர்.டி.எஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சி.டி.ஓ.யுமான மோனிஷ் தர்தா கூறுகையில், பொருளாதார நெறிமுறைகள் புதுமைகளிலும் தொழில் முனைவோரிடத்திலும் ஆழமாக வேறூன்றி உள்ளன. ஃப்ளேம் யுனிவர்சிட்டி அறிவித்தள்ள பாடத்திட்டம் உலகத்தை மாற்ற விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.


இந்த மாநாட்டில் டாக்டர். திஷன் கம்தர் முன்னுரையாற்றினார். ஐ.சி.ஆர்.டி.ஐ.எஸ்ஸின் துணை நிறுவனர் தமோனிஷ் தர்தா, யூனிகார்னை உருவாக்குவது பற்றிய நுண்ணறிவுகளை பற்றி உரையாற்றினார்.  மாநாட்டில் முடிவுரையாற்றிய டாக்டர் துவாரிகா பிரசாத் உனியலாண்ட் கூறுகையில் "இந்த மாநாடு வெற்றியாக அமைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒன்று, இந்த மாநாட்டிற்கு உலகளாவிய நிபுணர்களைக்  கொண்டுவருவதற்கான எங்கள் திறன், ஃப்ளேம் இன் கல்வியின் முன்னணி நிலையை பிரதிபலிக்கிறது. இரண்டாவதாக, எங்கள் ஊடாடும் அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களை அந்தந்த தொழில்களின் முன்னோடிகளுடன் சுதந்திரமாக ஈடுபட அனுமதித்தன. என்றார்.


மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாடு தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள், தொழில்முனைவோர் கல்வியின் முக்கியத்துவம், சவால்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான உதவிக் குறிப்புகள் ஆகியவற்றைக் கற்கவும், பகிர்ந்து கொள்ளவும் சிறந்த தளமாக அமைந்தது.  தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புகளில் முதுகலை திட்டம் பற்றி மேலும் அறிய www.flame.edu.in ஐ பார்வையிடவும்.


Popular posts
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image