இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கான சிறப்பு முகாம்
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்.எஸ்.எஸ் அலகு I, II, III,
18.02.2020 முதல் 28-02-2020 வரை
“இளைஞர்களும் தூய்மையான பாரதமும் 2020” என்ற பெயரில் முகாமை
ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு முகாமில், என்.எஸ்.எஸ் மாணவர்கள்
பல்வேறு நிகழ்வுகள், அடிப்படை வேலைகள், கலாச்சார நிகழ்வுகள்
போன்றவற்றில் பங்குபெற்றனர்.
இந்த சிறப்பு முகாமில் மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல்,
வெள்ளை அடித்தல், கண் பரிசோதனை, மரக்கன்று நடுதல், எய்ட்ஸ் நோய்
விழிப்புணர்வு, யோகா, பிளாஸ்டிக் ஒழிப்பு, குழந்தைகளுக்கான இலக்கிய
விளையாட்டுகள், ஊமை நாடகம், கலாச்சார நிகழ்வுகள், முதியோர் எழுத்தறிவு
முகாம் போன்ற பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த முகாமின் குறிக்கோள், இளைஞர்களை எதிர்கால தலைவர்களாக
மாற்றுவதற்கான மதிப்புகளை ஊக்குவிப்பதாகும். சுமார் 150 என்எஸ்எஸ்
மாணவர்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்கேற்று
ஈடுபட்டுள்ளனர்.
இந்த முகாமை சொக்கனூர் பஞ்சாயத்து, தலைவர் .பிரபு (அ) திருநாவுகரசு
துவக்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ்
ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். பாஸ்கர் மற்றும் இரத்தினம் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியின் முதல்வர் ரா முரளிதரன் மற்றும் முதன்மை
செயல் அதிகாரி பேராசிரியர் ரா மாணிக்கம், என்எஸ்எஸ் திட்ட அதிகாரிகள் .
எல். கதிர்வேல்குமரன், என்எஸ்எஸ் அலகு I, திரு. கே. சத்குருனாதன்,
என்எஸ்எஸ் அலகு II, செல்வி க. சரண்யா, என்எஸ்எஸ் அலகு ஆகியோர்
கலந்துகொண்டனர்.