ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்டின் தேசிய அளவிலான ‘ஸ்பார்க்’ தேர்வு அறிவிப்பு!!

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (ஏஇஎஸ்எல்) ‘ஆகாஷ் ஸ்பார்க்’ எனப்பெயரிடப்பட்ட ஒரு புதிய ஸ்காலர்ஷிப் தேர்வை அறிவித்துள்ளது. நாட்டில் 200க்கும் மேற்பட்ட மையங்களை ஆகாஷ் கொண்டிருக்கிறது. VII-ம் வகுப்பு முதல் IX-ம் வகுப்பு வரை பயிலும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு, அவர்களுடைய கனவுகளை நினைவாக்கும்  முயற்சியில் முதல் படிநிலை நடவடிக்கையை எடுப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்குவதே இத்தேர்வின் நோக்கமாகும். இது நாட்டில் உள்ள 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மார்ச் 15, 2020ல் நடைபெறவிருக்கிறது.ஆகாஷ் ஸ்பார்க், மாணவர்களுக்கு தேசிய அளவில் போட்டியிடுவதன் மூலம் கல்வி கட்டணத்தில் 90% வரை ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு உதவுகிறது. இந்த புதிய ஸ்காலர்ஷிப் அறிவிப்பு குறித்து, ஆகாஷ்எஜூகேஷன்சர்வீசஸ்லிமிடெட்-ன் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குநர் ஜே. சி. சௌத்ரிகூறியதாவது: “இந்த ஆண்டிலிருந்து, மாணவர்களுக்கு தேசிய அளவில் ஒரு ஸ்காலர்ஷிப் வெல்வதற்குரிய ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய ஆகாஷ் ஸ்பார்க்-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஸ்பார்க், மாணவர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களுடைய கனவுகளை நினைவாக்கும் பாதையில் அவர்களை வீறுநடை போடச்செய்யும் என்பது உறுதி” என்றார்.


ஆகாஷ் ஸ்பார்க், 2020 மார்ச் 15 அன்று, இந்தியாவெங்கும் 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நடைபெறும். ஒரு மணி நேர காலஅளவைக் கொண்ட இத்தேர்வு, காலை 11 மணியிலிருந்து, மதியம் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை என இரு ஷிப்ட்களாக நடத்தப்படும். பதிவு செய்வதற்கும் மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் கிடைக்கப் பெறுவதற்குமான கடைசி தேதி 2020, மார்ச் 13 ஆகும். பதிவுக்கட்டணம் ரூ.200 மட்டுமே. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.


Popular posts
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image