விருதுநகர் மாவட்டம் தம்ம நாயக்கன் பட்டியில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்

மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக விருதுநகர் வேர்ல்ட் விஷன் இந்தியா ஒத்துழைப்புடன் விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டியில் ஒரே பாரதம் உன்னத பாரதம், தீவிர இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம், முத்ரா கடன் திட்டம், பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . 
நேற்று முதல்நாள் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, மகளிருக்கு பந்து கைமாற்றும் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன.  
இரண்டாவதுநாள் நிகழ்ச்சி இன்று பள்ளி மாணவ மாணவியர் பங்குபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்துடன் துவங்கியது. இதனைத்தொடந்து கலைவாணர் தோல் பாவை கூத்து கலைநிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி தலைமை வகித்து இந்தியாவின் பன்முகத்தன்மை, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் குறித்து பேசினார். மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தீவிர இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் மற்றும் வாழ்க்கைமுறை நோய்கள் குறித்தும், மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளர் விஸ்வநாதன் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் முத்ரா கடன் திட்டம் குறித்தும், வேர்ல்ட் விஷன் தவபாக்கியம் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் குறித்து கருத்துரை ஆற்றினார்கள். ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்க்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்பு மற்றும் நோக்கவுரை நிகழ்த்தினார் கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் காட்டன் துணிப்பைகள் வழங்கப்பட்டன.


Popular posts
கொரோனாவால்  சரிந்துள்ள  பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை  செயல்படுத்த விரைந்து  நடவடிக்கை  எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல் 
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் மற்றும் வி. சுக்ரா மனநல ஆலோசனை மையம் ஆகியோர் ஒன்றிணைந்து தற்கொலையை தடுக்கும் பணி
Image
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image