ஓரியண்ட் எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தும் இன்வெர்டர் ஐ-வரிசை மின்விசிறி

ஆண்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் விற்றுமுதல் ஈட்டும் சிகே பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான ஓரியண்ட் எலெக்ட்ரிக் தனது புத்தம் புதிய ஐ-வரிசை ரக மின்விசிறிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. சாதாரண மின்விசிறிகளை விட 50% ஆற்றலையும், மின் கட்டணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இவை இசிஎம் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஐ-ஃப்ளோரல், ஹெக்டார் 500, ஐஓடி – இயலுறு & ஒலி கட்டுப்பாடு கொண்ட ஐ-ஃப்ளோட் மின்விசிறி என ஒவ்வொரு அறைக்கும், உள் அலங்காரத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் கிடைக்கும். மின் சிக்கனப் பிரிவில் முன்னணி நிறுவனமாகத் திகழ வேண்டும் என்பதுடன் பிரிமியம் மின் விசிறிகள் பிரிவில் இன்னும் வலுவாகத் தாம் பதிக்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் திட்டமாகும்.  


இது குறித்து ஓரியண்ட் எலெக்ட்ரிக் மேலாண் இயக்குனர் & சிஇஓ ராகேஷ் கன்னா கூறுகையில் ‘புதுமை மற்றும் சந்தையைக் கலக்கும் பொருள்களை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.  காலநிலை அவசரம், நுகர்வோரின் சுற்றுச்சூழல் உள்ளுணர்வு மற்றும் மின் சிக்கனம் தொடர்பாக அரசு அளிக்கும் ஊக்க அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஐ-வரிசை ரக இன்வர்டர் மோட்டார் அடிப்படையிலான ஸ்மார்ட்டான, மின் சிக்கன, ஐஓடி இயலறு மற்றும் சுற்றுச்சூழல் நட்பான மின் விசிறிகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். என்றார்.


ஓரியண்ட் எலக்ட்ரிக் லிமிடெட்டின் செயல் துணைத் தலைவர் அடுல் ஜெயின் கூறுகையில் 2020 ஜுலை தொடங்கி மின் விசிறிகளுக்கு பிஇஇ ஆற்றல் திறன் விதி முறைகள் கட்டாயவமாவதால் எங்கள் ஓரியண்ட் நிறுவனத்திற்கு இவற்றை அறிமுகப்படுத்த இதுவே சரியான தருணமாகும்.  குறைந்த அளவில் 50% ஆற்றலை இந்த மின் விசிறிகள் நுகர்வதால் கரியின் தடமும் கணிசமாகக் குறையும்’. ஐ-ஃப்ளோட், ஐ-ஃப்ளோரல் மற்றும் ஹெக்டார் 500 ஆகிய மூன்று ரகங்களில் கண்கவர் வண்ணங்கள், வடிவமைப்புகள், சூப்பர் திறனுடன் சத்தமின்றி அமைதியுடன் சுழலுதல், 100% துருப்பிடிக்காத பிளேடுகள் மற்றும் ஹை க்ளாஸ் பிரிமியம் ஃபினிஷ் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டவை.  ஐ-ஃப்ளோட் மின் விசிறி ஐஓடி-இயலுறு என்பதால் ஓரியண்ட் ஸ்மார்ட் கைபேசி செயலி அல்லது அலெக்ஸா மற்றும் கூகிள் அசிஸ்டண்ட் வழியே ஒலி ஆணைகளையும் எளிதாக இயக்கலாம். ஓரியண்ட் ஐ-வரிசை மின்விசிறிகள் தொடக்க விலை ரூ 2850/- ஆகும். என்றார்.


Popular posts
ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
Image
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image