கியா கார்னிவல் கார் திருப்பூரில் அறிமுகம்
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள டி ஆர் ஷோரூமில் புதிய கார்னிவெல் மாடல் காரை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம் சண்முகம் அறிமுகம் செய்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். முக்கிய பிரமுகர்களாக கே.என். மணிவண்ணன், கோவை ரேடிசன் ஹோட்டல் அதிபர் பாலசுப்பிரமணியம், பொள்ளாச்சி என்.ஸ்ரீனிவாசன், நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், இணை இயக்குனர் அனிஷ் பிரஸ்ஸன்னா, தேவி கலா செந்தில்குமார், மற்றும் திருப்பூர் தொழில் துறையினர், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.