இந்தியர்களை நியூசிலாந்து இதயம் கனிந்த காலை வணக்கத்துடன் வரவேற்கிறது

பல கலாச்சாரங்களில், ஒளி என்பது மனதின்தெளிவு மற்றும் ஆத்மஞானத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. ஒரு புதிய காலை என்பதுஒரு புதிய நம்பிக்கையை, ஒரு புதிய நாளை, நேர்மறையான எண்ணங்கள் மற்றும் நல்லபயன்களைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை இந்தியர்கள் நீண்டகாலமாக கொண்டுள்ளனர்.

பழங்காலத்திலிருந்தே, இந்தியர்கள் சூர்ய நமஸ்காரம் (சூரியனுக்கு வணக்கம் தெரிவித்தல்) என்ற ஒரு பிரபலமான யோகாசனத்தை செய்து வருகின்றனர்.இந்த கிரகத்தில் உயிரைத் தக்கவைப்பதற்காக சூரியனுக்கு நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு இப்படி செய்கிறார்கள்.

அதேபோல், நியூசிலாந்தும் விடியலைக் கொண்டாடுகிறது, இதைக் குறிக்கும் வகையில், நியூசிலாந்து சுற்றுலாத்துறை‘ 100% தூய வரவேற்பு - 100% தூய நியூசிலாந்து’ (100% ப்யூர் வெல்கம் – 100% ப்யூர் நியூசிலாந்து) என்றதனது புதிய உலகளாவிய விளம்பர பிரச்சாரத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு புதிய நாள் விடியலிலும், சூரிய ஒளியைக் முதலில்காணும் நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாகும். இந்த உண்மையால் ஈர்க்கப்பட்ட நியூசிலாந்துசுற்றுலாத்துறை,“100% தூய வரவேற்பு - 100% தூய நியூசிலாந்து” என்ற முன்னெடுப்பின்ஒரு பகுதியாக, “உலகே உனக்கு காலை வணக்கம்” (குட் மார்னிங் வேர்ல்டு) என்றதலைப்பில் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன்படி அந்நாட்டு மக்கள் நாடு முழுவதிலுமிருந்து தங்களுக்கு பிடித்த இடங்களில் இருந்தபடி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்தில் தகவல்களை அனுப்புவார்கள்.கனிவாக நட்புடன்மக்கள், ஆச்சர்யமூட்டும் நிலப்பரப்புகள் மற்றும் பல்வேறுவகையானபொழுதுபோக்கு செயல்பாடுகள் ஆகியவற்றுடன், நியூசிலாந்து எப்படி ஒரு தனித்துவமான சுற்றுலாத்தளமாகத் திகழ்கிறதுஎன்பதை இந்த விளம்பர பிரச்சாரம் முன்வைக்கிறது.

நியூசிலாந்து நாட்டின்சுற்றுலாஅம்சங்களை பற்றிய உண்மையான கண்ணோட்டத்தைப் பகிரும் இந்த விளம்பர பிரச்சாரத்தை மகிழ்ச்சியாக துவங்கி வைத்து பேசிய அந்நாட்டு சுற்றுலாத் துறையின் ஆசியபிராந்திய நுகர்வோர் மார்கெட்டிங் மேலாளர், திரு. வெனஸ்ஸா சென்,அவர்கள் கூறியதாவது, “மவோரி கலாச்சாரத்தில், விடியல் என்பது ஒரு நாளின் ஒரு முக்கியமான நேரமாகும்– நாங்கள் ஒவ்வொரு விடியலிலும், வாழ்க்கையையும் அதன் புதிய தொடக்கங்களையும் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு காலையிலும், அந்தநாள் கொண்டுவரும் வாய்ப்புகளை ஏற்று அதனை அங்கீகரிக்கிறோம். இந்த‘உலகே உனக்கு காலை வணக்கம்’ (குட் மார்னிங் வேர்ல்டு) தகவல் தொடரானது எங்களதுசர்வதேச மார்கெட்டிங் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.  எங்கள் நாட்டு மக்களின் பண்பையும், அன்பான உபசரிப்பு குணத்தையும் வெளிகாட்டுகிறோம். எங்கள்உள்ளங்களையும், இல்லங்களையும் திறந்து வைத்துஉலகத்தார்அனைவரையும் வரவேற்கும் நாங்கள், இந்திய பயணிகளையும் எங்கள் நாட்டிற்கு இனிதே வரவேற்கிறோம்.  நியூசிலாந்து உங்களுக்கு மறக்கமுடியாத அற்புதமான அனுபவங்களைத் தரும், என்றார்.


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்