குடியரசு தின அணிவகுப்பில் கலக்கிய தமிழகம்

புதுடெல்லி
நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிரேசில் அதிபர் போல்சனரோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 
குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்சம் மக்கள் திரண்டனர்.
டெல்லி ராஜபாதையில் குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில் அய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
சுமார் 17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர்கள் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.


Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்